தூக்குப்போட்டு பெண் தற்கொலை
வேதாரண்யம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த புதுப்பள்ளியை சேர்ந்தவர் ரவி (வயது 42). இவர் மலேசியாவில் தோட்டவேலை செய்து வருகிறார். இவருக்கு கார்த்திகேஸ்வரி (39) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கார்த்திகேஸ்வரிக்கும் அதே பகுதியில் கேபிள் வைத்து நடத்தி வரும் ரவிச்சந்திரன் (52) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்த்திகேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்த வேட்டைக்காரணிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திகேஸ்வரி உடலை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.