திருத்தணி அடுத்த தும்பிகுளத்தில் நாளை கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

திருத்தணி அடுத்த தும்பிகுளம் கிராமத்தில் ஆவின் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை ஆகியவை இணைந்து சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை, 8 மணி முதல் மாலை, 3 மணிவரை நடைபெறுகிறது.

Update: 2023-07-27 11:05 GMT

இந்த முகாமில், கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல். மலட்டுத் தன்மை நீக்கம், ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, மாடுகள் மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி போடுதல், நோய் தீர்க்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் முகாமில் கிடாரி கன்று பேரணி நடத்தி சிறந்த மூன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே கால்நடை வளர்க்கும் விவசாயிகள் அனைவரும் முகாமில் பங்கேற்று கால்நடைகளுக்கு சிகிச்சை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் தாமோதரன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்