கால்நடை மருத்துவ முகாம்
கடையநல்லூர் அருகே குமந்தாபுரத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் வனத்துறை மற்றும் கால்நடை துறை இணைந்து இலவச கால்நடை மருத்துவ முகாமை கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரத்தில் நடத்தியது. நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். 1-வது வார்டு உறுப்பினர் ரேவதி பாலீஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில் வனத்துறை அலுவலர்கள் முருகேசன், ரவிந்திரன், கால்நடை மருத்துவர் அசன் காசிம், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஆறுமுகம் சுகாதார ஆய்வாளர் சக்திவேல், வார்டு செயலாளர் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.