கால்நடை மருத்துவ முகாம்

செண்டாங்காடு ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-02-12 19:13 GMT

கரம்பயம்:

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செண்டாங்காடு ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராசு முன்னிலை வகித்தார். முகாமில் பசு கன்றுகளுக்கும், ஆடுகளுக்கும் குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், மலடு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை கருவூட்டல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. சிறந்த கால்நடை வளர்ப்போர் மற்றும் சிறந்த கிடாரி கன்றுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாம் பணிகளை நாட்டுச்சாலை கால்நடை மருந்தக உதவி மருத்துவர் லாவண்யா தலைமையில் மருத்துவர்கள் வீரமணி, தெய்வவிருதம் பார்த்தசாரதி, சீதா, உதவியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர். முகாமில் மனோரா ரோட்டரி சங்க தலைவர் சிவச்சந்திரன், செயலாளர் சத்தியமூர்த்தி மற்றும் சீதாராமன் ஆகியோர் சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கினர். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்