கால்நடை மருத்துவ முகாம்

ஆலங்குளம் அருகே கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-01-05 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் ஒன்றியம் கடங்கனேரி கிராமத்தில் வெண்ணிலிங்கபுரம் கால்நடை மருந்தகம் மூலம் தமிழக முதல்வரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமை தாங்கி, முகாமை ெதாடங்கி வைத்தார். கடங்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தேன்ராஜ் முன்னிலை வகித்தார். வெண்ணிலிங்கபுரம் கால்நடை மருத்துவர் சந்திரன், நெட்டூர் கால்நடை மருத்துவர் ராமசெல்வம், கால்நடை ஆய்வாளர் மகேஷ், கால்நடை பராமரிப்பு உதவியாளர் நடராஜன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய்க்கான தடுப்பூசி மற்றும் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், ஆடுகள் மற்றும் கிடாரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டது. முகாமில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு பயன் அடைந்தனர். முகாமில் கடங்கனேரி தி.மு.க. கிளை செயலாளர் வைத்திலிங்கம், ஒன்றிய பிரதிநிதி வடிவேல் முருகன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்