கால்நடை மருத்துவ முகாம்

கடையநல்லூர் அருகே கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-11-18 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் ஒன்றியம் சிங்கிலிபட்டியில் கால்நடை பராமரிப்பு மற்றும் சேவைத்துறை, கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. முகாமை ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் தொடங்கி வைத்தார். மருத்துவ குழுவின் தலைமை மருத்துவர் டாக்டர் கலையரசி, செங்கோட்டை ஆபிரகாம், டாக்டர்கள் ஹசன் காசிம், சிவக்குமார், இம்தியாஸ் அகமது, தனலட்சுமி, அருண் பாண்டியன், தயோபில்ஸ், டாக்டர் மகேஸ்வரி, ஜான்சுபாஷ் தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். புன்னையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி கண்ணன், ஆசிரியர் கண்ணன், பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் கால்நடை இனப்பெருக்கம், தீவன உற்பத்தி, பாதுகாப்பு நுட்பங்கள், மலட்டுத்தன்மை, நோய் கண்டறிதல் பற்றி விழிப்புணர்வு நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்