கால்நடை மருத்துவ முகாம்

நாகை ஐவநல்லூரில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-10-29 18:45 GMT

வெளிப்பாளையம்:

நாகை ஒன்றியம் ஐவநல்லூர், ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி தலைவர் மகேஸ்வரி பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். நாகை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ், உதவி இயக்குனர் அசன் இபுராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பரிசோதனை, தடுப்பூசி மற்றும் சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பாக கால்நடைகளை பராமரிப்பு செய்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் பெருங்கடம்பனூர் கால்நடை உதவி டாக்டர் முனிவெங்கட் கிருஷ்ணா, கால்நடை டாக்டர்கள் பூபதி, ராதா கால்நடை ஆய்வாளர் கலைவாணி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சிவராணி, பழனிச்சாமி ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தன

Tags:    

மேலும் செய்திகள்