கால்நடை மருத்துவ முகாம்

வாய்மேடு அருகே கால்நடை மருத்துவ முகாம்

Update: 2023-08-23 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேடு அருகே பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு ஊராட்சி தலைவர் சத்ய கலா செந்தில்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் உதவி கால்நடை மருத்துவர்கள் கலைச்செல்வி, சிவசூரியன் ஆகியோர் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சினை ஊசி போடுதல், தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்