கரூரில் படைவீரர் கொடிநாள் நிதி சேகரிப்பு தொடங்கியது

கரூரில் 2022-ம் ஆண்டிற்கான படைவீரர் கொடிநாள் நிதி சேகரிப்பு தொடங்கியது. இந்தாண்டிற்கு ரூ.96 லட்சத்து 83 ஆயிரம் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-12-08 18:34 GMT

கொடிநீர் நிதி சேகரிப்பு

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் 2022-ம் ஆண்டிற்கான நிதி சேகரிப்பினை கலெக்டர் பிரபுசங்கர் உண்டியலில் நிதி செலுத்தி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:- கரூர் மாவட்டத்தில் நம்முடைய நாட்டின் அனைவருக்காகவும் பாடுபட்டு இருக்கக்கூடிய அனைத்து ராணுவ வீரர்களுக்கும் மரியாதை அனுசரிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கொடிநாள் நிதியாக நமக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.91 லட்சத்து 67 ஆயிரம் ஆகும். அதில் நாம் இலக்கைவிட அதிகமாக ரூ.92 லட்சம் சேகரித்துள்ளோம். இதற்காக கவர்னர் பாராட்டு தெரிவிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம்.

ரூ.96 லட்சம் இலக்கு நிர்ணயம்

கொடிநாள் வசூலை பொறுத்த வரையில் நடப்பு ஆண்டில் 2021-22 இலக்காக ரூ.96 லட்சத்து 83 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை இரண்டு மடங்காக நிதி சேகரிக்க முயற்சி செய்யப்படும்.

கரூர் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய ஒவ்வொரு முன்னாள் ராணுவத்தினர், முப்படையை சேர்ந்த அனைத்து வீரர்களுக்கும், தங்கள் குடும்பத்தார்களுக்கும் எந்தவிதமான கோரிக்கை இருந்தாலும், முன்னுரிமை அடிப்படையில் தனி கவனம் செலுத்தி மாவட்ட நிர்வாகம் உங்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கு துணையாக இருப்போம், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்