வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

வாணியம்பாடியில் தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-01-25 19:26 GMT

வாணியம்பாடி-பெருமாள்பேட்டை கூட்ரோடு பகுதியில் நகர தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர கூட்டுறவு வங்கி தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.சாரதிகுமார் தலைமை தாங்கினார். நகரசபை தலைவர் உமா சிவாஜி கணேசன் முன்னிலை வகித்தார். நகர துணை செயலாளர் குபேந்திரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர்கள் தஞ்சை கூத்தரசன், முனைவர் சந்திரபாபு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் முனிவேல், பேரூராட்சி செயலாளர்கள் செல்வராஜ், ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் அணி அமைப்பாளர் பி.சீனிவாசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்