விருத்தாசலம் வி.இ.டி. பள்ளியில் முப்பெரும் விழா

விருத்தாசலம் வி.இ.டி. பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது

Update: 2022-09-06 17:01 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் எருமனூர் வி.இ.டி. பள்ளியில் ஆசிரியர் தின விழா, மாணவர்களுக்கு பாராட்டு விழா, பரிசளிப்பு விழா என முப்பெரும் விழாவாக நடந்தது. விழாவிற்கு லயன்ஸ் சங்க தலைவரும், இன்ஜினீயருமான அருள் தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் விஜயலட்சுமி சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் எடில்பர்ட் பெலிக்ஸ் வரவேற்றார். பள்ளியின் பொருளாளர் மோகனா கொளஞ்சிநாதன் ஆசிரியர் தினம் குறித்து சிறப்புரையாற்றினார். லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் ரத்தின சுப்பிரமணியன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், மனோகரன், ராமலிங்கம், ஜெய்சங்கர், கோவிந்தராஜுலு, ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் சுரேஷ் சந்த், அருணாசலம், முத்து நாராயணன் ஆகியோர் ஆசிரியர்களை பாராட்டி பேசினார்கள். பள்ளியின் தலைவர் பத்மாவதி சக்திவேல் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் அகர்சந்த் கலந்து கொண்டு ஆசிரியர்களை பாராட்டி பேசியதுடன், அரசு பொது தேர்வுகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முதுகலை தமிழாசிரியர் சேதுராமன், ஆசிரியர் தின ஏற்புறை வழங்கினார். முடிவில் செயலாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார். முன்னதாக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்