வேப்பங்காடுசி.பா.சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு விழா
வேப்பங்காடு சி.பா.சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு விழா நடந்தது.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வேப்பங்காடு சி.பா.ஆதித்தனார் நினைவு தொடக்கப்பள்ளி மற்றும் சி.பா.சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு உடன்குடி வட்டார கல்வி அலுவலர் டக்ளஸ் அல்பட்ராஜ் தலைமை தாங்கினார். தொழில் அதிபர் சுடலைமுத்து, பழைய மாணவர் வீரபாண்டி, சிலம்ப பயிற்சியாளர் சிவமுத்துலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமார் வரவேற்று பேசினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் உடற்பயிற்சிகள், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை பள்ளிச் செயலாளர் ஆதிலிங்கம, நிர்வாகக்குழு தலைவர் சங்கரநாராயணன், பொருளாளர் வைகுண்டராமன், சென்னைவாழ் வேப்பங்காடு நாடார் சங்க தலைவர் சந்திரபோஸ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் பரமேஸ்வரன், சுப்பிரமணியன், லிங்கராஜ், அருணாச்சலம், சுரேஷ்குமார், சேர்மத்துரை, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கொடி நன்றி கூறினார்.