வேணுகோபால சுவாமி கோவில் தேர் புதுப்பிக்கும் பணி

வேணுகோபால சுவாமி கோவில் தேர் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2023-05-20 20:44 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 11 நாட்கள் வைகாசி வசந்த விழா நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த விழாவின் 9-வது நாளில் தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இதனை காண பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வருவர். இந்தநிலையில் தேர் பழுதடைந்தது காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள், பக்தர்கள் எப்போது தேரோட்டம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஊர் பொதுமக்கள், அனைத்து சமுதாய பெரியவர்கள், கோவில் நிர்வாகத்தினர் ஆகியோர் இணைந்து நிதியை வழங்கியதால் தேர் புதுப்பிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்தபணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டார். பின் னர் அவர் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து தனது பங்களிப்பாக ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கினார். விரைவில் பணிகள் முடிவடைந்து தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியை நடத்தும் படி அறிவுறுத்தினார். அப்போது முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், தேர் கமிட்டி பொறுப்பாளர்கள், அனைத்து சமுதாய பெரியவர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்