வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திடீர் ஆய்வு

வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திடீர் ஆய்வு நடத்தினார்.

Update: 2023-08-04 20:29 GMT

அடுக்கம்பாறை

வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திடீர் ஆய்வு நடத்தினார்.

கணியம்பாடியில் உள்ள வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் நேற்று வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

பின்னர் டி.ஐ.ஜி. போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை சரிபார்த்து, போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். போலீஸ் நிலையத்தையும் மற்றும் வளாகத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள குளத்தை பார்வையிட்டு, அதனை பராமரிக்க உத்தரவிட்டார்.

பின்னர் ஓய்வு பெற உள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மன் மற்றும் ரங்கநாதன் ஆகியோர் தென்னை மரக்கன்றுகளை டி.ஐ.ஜி. முன்னிலையில் நட்டனர்.

ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, சப்-இன்ஸ்பெக்டர்கள் விக்னேஷ், முரளிதரன், நரசிம்மன், ரங்கநாதன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்