வேலூரில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதால் மரம் தீப்பிடித்து எரிந்தது.

வேலூரில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதால் மரம் தீப்பிடித்து எரிந்தது.

Update: 2023-05-03 19:12 GMT

வேலூரில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதால் மரம் தீப்பிடித்து எரிந்தது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கமும் சற்று குறைந்துள்ளது. வேலூரில் தினமும் 100 டிகிரிக்கும் மேல் வாட்டி வதைத்த வெயில் சில நாட்களாகவே குறைந்த அளவே பதிவாகிறது.

இந்த நிலையில் நேற்று மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 7 மணி அளவில் திடீரென மழை பெய்தது. தொடர்ந்து இடி, மின்னலுடன் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

வேலூர்-ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர். ஆங்காங்கே சில இடங்களில் திடீர் மின்தடையும் ஏற்பட்டது.

இந்த நிலையில் வேலூர் சின்னஅல்லாபுரத்தில் நந்தகோபால் என்பவரது வீட்டின் அருகே உள்ள தென்னை மரம் மீது மின்னல் தாக்கியது. இதனால் சுமார் 25 அடி உயரம் கொண்ட மரம் தீப்பிடித்து எரிந்தது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு வாகனம் மூலம் தீயை அணைக்க முடியாத நிலை இருந்ததால் அருகில் உள்ள வீட்டின் மாடி மீது ஏறி பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி தென்னை மரத்தில் ஊற்றி தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்