வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திடீர் ஆய்வு

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-09-22 17:03 GMT

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமிபிரியா திடீர் ஆய்வு நடத்தினார். அலுவலகத்திற்கு வந்த அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் அவர் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், சான்றிதழ்களை எவ்வாறு பதிவேற்றம் செய்கின்றனர் என கேட்டறிந்தார். கணினியில் அந்த நடைமுறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அலுவலகத்தில் இருந்த கோப்புகளையும் ஆய்வு செய்தார்.

பின்னர் விருதம்பட்டியில் உள்ள சர்க்கார் தோப்பில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்