வேலூர் மாநகராட்சி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

வேலூர் மாநகராட்சி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-10-30 12:47 GMT

வேலூர் மாவட்ட பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எஸ்.எல்.பாபு, மாநில செயலாளர் சங்கர், மாவட்ட செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் மனோகரன் கலந்து கொண்டு பேசினார். அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் முனுசாமி வரவேற்றார்.

கூட்டத்தில், வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநகராட்சி நிர்வாகம் சரியாக பயன்படுத்தவில்லை. அதனால் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பருவமழை தொடங்க உள்ளதால் மாநகராட்சி பகுதியில் குண்டும், குழியுமான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வேலூரை அடுத்த பெருமுகையில் அமைக்கப்பட்ட மணல்குவாரியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும். காட்பாடி முதல் பாகாயம் வரையிலான போக்குவரத்து நெரிசலுக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், பா.ஜ.க. பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் குமரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்