தினசரி சந்தை அமைக்கும் பணி தீவிரம்

Update: 2022-07-05 16:40 GMT


வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை வளாகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் கடைகள், குடிநீர் வசதி, ஏ.டி.எம். எந்திரம், பாதுகாவலர் அறை, வாகன நிறுத்தம், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் ரூ.3 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் தினசரி சந்தை அமைக்கும் பணி தொடங்கி தற்போது கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது.

 வாரச்சந்தை வளாகத்தில் தினசரி சந்தை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், தற்போது ஞாயிற்றுக்கிழமை தோறும் செயல்பட்டு வந்த வாரச்சந்தை தற்காலிகமாக வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்