போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2023-02-16 18:45 GMT

கிணத்துக்கடவு

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் போலீஸ் நிலையம் அருகே சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள 35 கிராம மக்கள் நில பத்திரப்பதிவு, திருமண பதிவு, இறப்பு சான்று, உயில், நில அடமானம், வில்லங்க சான்று உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக முகூர்த்த நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை, அதன் முன்பு உள்ள சர்வீஸ் சாலையில் தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால் பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் பஸ்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்தில் தினமும் 90-க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துகின்றனர். அதை முறைப்படுத்த வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்