இரும்பு கம்பிகளை எடுத்து செல்லும் வாகனங்கள்
திருவாடானை தாலுகாவில் ஆபத்தான முறையில் இரும்பு கம்பிகளை எடுத்து செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
தொண்டி,
திருவாடானை தாலுகாவில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனங்களில் இரும்பு பொருட்களை ஏற்றி செல்வதை அதிக அளவில் பார்க்க முடிகிறது. பெரும் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் அதனால் உயிர் பலி ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதை உணராமல் வாகனங்களில் பொருட்கள் ஏற்றிச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இது போன்ற செயல்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் பொருட்களை வாகனங்களில் ஏற்றி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.