3 ஆட்டோக்கள், 2 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு

நாகையில் 3 ஆட்டோக்கள், 2 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-05-03 19:15 GMT

நாகையில் 3 ஆட்டோக்கள், 2 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்

நாகை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது சர்புதீன். இவர் அதே பகுதியில் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

நள்ளிரவில் அங்கு நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனாலும் அங்கு வைக்கப்பட்டிருந்த 3 ஆட்டோக்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

முன்விரோதம் காரணமா?

இதுகுறித்து முகமது சர்புதீன், முன்விரோதம் காரணமாக சிலர் வாகனங்களுக்கு தீ வைத்து சென்று விட்டதாக நாகை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், நாகை டவுன் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வாகனங்களுக்கு தீ வைத்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்