அரசு ஊழியர் சங்கம் சார்பில் வாகன பிரசார இயக்கம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வாகன பிரசார இயக்கம் நடைபெற்றது.

Update: 2022-06-23 19:20 GMT

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வாகன பிரசார இயக்கம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வேல்முருகன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் மலர்விழி, அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் அம்சராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதையடுத்து, அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும். சத்துணவு ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் பணி நீக்கம் காலமான 41 மாத காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பி ஊழியர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்