வேலூரில் வாகன பிரசார இயக்கம்

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் வேலூரில் வாகன பிரசார இயக்கம் நடந்தது.

Update: 2022-12-17 16:29 GMT

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே வாகன பிரசார இயக்கம் இன்று நடந்தது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், பொருளாளர் விஜயலட்சுமி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் அஜீஸ்குமார், பொருளாளர் ஜெயகுமார் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் இந்த கோரிக்கைகள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.

இதில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் செல்வகுமார், செயலாளர் திருஞானசம்பந்தம், ஜாக்டோ-ஜியோ மாவட்ட செய்தித்தொடர்பாளர் வாரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்