நெல்லை மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்தது.
ஓணம் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் கேரளாவில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் தமிழகத்திற்கு வந்து காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர். மேலும் மழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை உழவர் சந்தையில் நேற்று முன்தினம் ரூ.17-க்கு விற்பனையான தக்காளி நேற்று ரூ.40-க்கு விற்பனையானது. அதேபோல் ரூ.20-க்கு விற்பனையான வெண்டைக்காய் ரூ.30 உயர்ந்து ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.40-க்கு விற்பனையான பச்சை மிளகாய் ரூ.50-க்கும், ரூ.55-க்கு விற்பனையான முருங்கைக்காய் ரூ.84-க்கும் விற்கப்பட்டது. இதேபோல் பணகுடி மார்க்கெட்டிலும் காய்கறிகள் விலை சற்று உயர்ந்து உள்ளது.