திருநகர் வாரச்சந்தையில் குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகள் - நடை பயிற்சியாளர்கள் அவதி

திருநகரில் வாரச்சந்தையில் குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகளால் நடைபயிற்சியாளர்கள் அவதி அடைந்து உள்ளனர்.

Update: 2023-02-27 21:41 GMT

திருப்பரங்குன்றம்

திருநகரில் வாரச்சந்தையில் குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகளால் நடைபயிற்சியாளர்கள் அவதி அடைந்து உள்ளனர்.

வாரச்சந்தை

மதுரை திருநகர் மைய பகுதியில் அண்ணா பூங்கா அமைந்து உள்ளது. மாநகராட்சி நிர்வாக மேற்பார்வையில் உள்ள இந்த பூங்கா வளாகத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று காய்கறி வாரச்சந்தை நடந்து வருகிறது.

அது திருநகர் பகுதி பொதுமக்களுக்கு மட்டுமல்லாது திருநகரை சுற்றி தனக்கன்குளம், விளாச்சேரி உள்ள பல்வேறு கிராம பகுதி மக்களுக்கும் பயனாக உள்ளது. மேலும் வியாபாரிகளுக்கும் வாழ்வாதாரமாக உள்ளது.

காய்கறி கழிவுகளால் பாதிப்பு

இதே சமயம் வியாபாரம் முடிந்ததும் வெள்ளிக்கிழமை இரவிலோ அல்லது சனிக்கிழமைதோறும் அதிகாலை 5 மணிக்குள் காய்கறிகழிவுகள், மாட்டுசாணங்கள், காகிதகுப்பைகளை அப்புறப்படுவதில்லை. அதனால் சனிக்கிழமைதோறும் பூங்காவை சுற்றி நடை பயிற்சி செய்ய முடியமால் நடைபயிற்சியாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் பூங்காவை இருப்பிடமாக கொண்டுள்ள மாடுகளின் சாணங்களும் கிடக்கிறது. எனவே நடைபாதையில் குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடைப்பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்