சாலையோர காய்கறி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் சாலையோர காய்கறி வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்;
கும்பகோணத்தில் சாலையோர பழவண்டி, காய்கறி வண்டி, உணவு, பூ வண்டி தொழிலாளர்கள் சங்க ஏ.ஐ.சி.டி.யூ. சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு கவுரவ தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தெரு வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, வியாபார சான்றிதழ் வழங்க வேண்டும், அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுப்பதற்கு தமிழகம் முழுவதும் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மூலம் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும். சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு தரமான தள்ளு வண்டிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.