இயற்கை வேளாண்மை முறையில் விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி பயிற்சி
இயற்கை வேளாண்மை முறையில் விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி பயிற்சி அளிக்கப்பட்டது.
நாகர்கோவில்,
இயற்கை வேளாண்மை முறையில் விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் ராதாபுரம் இந்தியன் வேளாண்மை கல்லூரி மற்றும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகமும் இணைந்து இயற்கை வேளாண்மை முறையில் காய்கறி சாகுபடி பற்றி அ.திருமலாபுரம் கிராமத்தில் 50 விவசாயிகளுக்கு உதவி பேராசிரியர் பிசா சலீம் பயிற்சி அளித்து விளக்க உரையாற்றினா்.
அதைத்தொடர்ந்து ராஜாஸ் கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் எஸ்.ஏ.ஜாய் ராஜா அறிவுரையின்படி, வள்ளியூர் வட்டார விவசாயிகள் 30 பேருக்கு இந்தியன் வேளாண்மை கல்லூரியின் ஆலோசகர் ஜொனாதன் மற்றும் முதல்வர் மாணிக்கவாசகம் முன்னிலையில் இயற்கை வேளாண்மை முறையில் பஞ்சகவ்யம், அசோலா, மண்புழு உரம், ஊட்டம் ஏற்றிய தொழுஉரம் தயாரிப்பு முறை மற்றும் களைகளை எருவாக்கும் முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பேராசிரியர் பேச்சியப்பன் பாரதி, உதவி பேராசிரியர் பிசாசலீம் மற்றும் மூன்றாம் ஆண்டு இளநிலை வேளாண் மாணவர்களும் இணைந்து பயிற்சி அளித்தார்கள்.