திருச்செந்தூரில் வீரவணக்க கூட்டம்

திருச்செந்தூரில் வீரவணக்க கூட்டம் நடந்தது.

Update: 2023-05-23 18:45 GMT

திருச்செந்தூர்:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த தொடர் போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்செந்தூரில் வெளிச்சம் சட்ட உதவி மையத்தில் மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் நினைவு நாள் வீரவணக்க கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ் பரிதி, செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படி முத்து, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் நந்தன், திருச்செந்தூர் நகர பொருளாளர் தோப்பூர் சரண்ராஜ், விடுதலைச் சிறுத்தைகள் அம்பேத்கர் ஆட்டோ நிலையம் தலைவர் இசக்கிமுத்து, பெருந்தலைவர் காமராசர் நற்பணி இயக்கத்தின் தலைவர் சுரேஷ், தொழிலாளர் விடுதலை முன்னணி ஒன்றிய துணை அமைப்பாளர் தமிழ்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்