வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்
வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை சார்பில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கட்டபொம்மன் அறக்கட்டளை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். பஸ் நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட கட்டபொம்மன் உருவப்படத்திற்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் திருஞானம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் ரூபி. பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.