வீரமாகாளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.6½ லட்சம் வசூல்

வீரமாகாளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.6½ லட்சம் வசூல் ஆகி உள்ளது.

Update: 2022-12-14 18:50 GMT

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் உண்டியல் நேற்று திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. இந்து அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் அனிதா முன்னிலையில், அறந்தாங்கி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் காணிக்கையை எண்ணினர். ரூ.6 லட்சத்து 47 ஆயிரத்து 593-ஐயும் 32 கிராம் தங்கம், 68 கிராம் வெள்ளியும் இருந்தது. காணிக்கை எண்ணும் பணியின் போது கோவில் செயல் அலுவலர் முத்துக்குமரன், ஆய்வாளர் யசோதா, கோவில் பணியாளர் வடிவேல் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்