வீரகனூரில் 68 மில்லி மீட்டர் மழைப்பதிவு

வீரகனூரில் 68 மில்லி மீட்டர் மழைப்பதிவாகி இருந்தது.

Update: 2022-12-12 20:28 GMT

சேலம், 

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு வீரகனூர், ஏற்காடு, தலைவாசல், ஆனைமடுவு உள்ளிட்ட பல இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சேலத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சில இடங்களில் லேசாக மழை தூறியது. இரவில் கடுமையான குளிர் நிலவியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக வீரகனூரில் 68 மில்லி மீட்டர் மழை பெய்தது. மற்ற இடங்களில் பெய்த மழைஅளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

ஏற்காடு-40.2, தலைவாசல்-37, ஆனைமடுவு-21, மேட்டூர்-18.2, கெங்கவல்லி-18, ஓமலூர்-8, தம்மம்பட்டி-7, கரியகோவில்-6, பெத்தநாயக்கன்பாளையம்-5, சங்ககிரி-4.4, காடையாம்பட்டி-3.5, சேலம்-3.1, ஆத்தூர்-2.6, எடப்பாடி-2.

Tags:    

மேலும் செய்திகள்