வீர ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு

வேளுக்குடி வீர ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு நடந்தது

Update: 2022-09-05 18:34 GMT

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் பிரசன்ன வெங்கடேச பெருமாள், வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. வடக்கிலிருந்து தெற்கே பாயும் வெள்ளையாறு நதியின் கரையில் அமைந்துள்ளதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பார்த்தன்பள்ளி எம்பெருமானின் அபிமான தலமாகவும், பல வேள்விகள் கண்டு, வேள்வி நகர் என்றும், தற்போது வேளுக்குடி என்று வழங்கி வரும் சிற்றூரில் பிரசன்ன வெங்கடேச பெருமாள், வீர ஆஞ்சநேயர் மற்றும் ராமர், கருடாழ்வார், சேனை முதலியார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், ராமானுஜர் ஆகிய மூலஸ்தானங்கள் அமையப் பெற்ற கோவில் ஆகும். இக்கோவிலில் குடமுழுக்கு நடத்திட தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணி வேலைகள் நடைபெற்றது. திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று காலை குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகளும், கலச கர்ஷணம், அக்னி பிரதிஷ்டை, வெங்கடேசப் பெருமாள் மற்றும் வீர ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் பூஜை, வாஸ்து சாந்தி, புண்யாஸ்தனம் மற்றும் பிரதான ஹோமங்கள் நடைபெற்றன. நேற்று காலை கடங்கள் புறப்பட்டு, கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்