வேடசந்தூர் ஒன்றியக்குழு கூட்டம்
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில். ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தேவசகாயம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் கலந்துகொண்டு, தங்களது வார்டு பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பேசினர். அதற்கு ஒன்றியக்குழு தலைவர் பதில் அளித்தார். கூட்டத்தில், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.