அரூர்:
அரூர் அருகே உள்ள புளுதியூரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் கால்நடை சந்தை கூடுகிறது. அதன்படி நேற்று வழக்கம் போல் கால்நடை சந்தை நடந்தது. இதில் ஒரு மாடு ரூ.8,800 முதல் ரூ.40,900 வரையும், ஒரு ஆடு ரூ.4,300 முதல் ரூ.9,200 வரையும் விற்பனையாகின. மொத்தம் ரூ.29 லட்சத்துக்கு ஆடு, மாடுகள் விற்பனையாகின. இதேபோல் நாட்டுக்கோழி விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது. அவற்றை பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.