வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
வேதாரண்யம்
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜு முன்னிலை வகித்தார். இதில் உறுப்பினர்கள் நடராஜன், உஷாராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.
மாலதி துரைராஜ்: மருதூர் தெற்கு கடைவீதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் தண்ணீர் வீணாகி தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய வேண்டும்.
ஏ.ஆர்.வேதரத்தினம்: வாய்மேடு கிராம மீனவர்கள் கடலுக்குச்செல்லும் மணல் சாலையை மேம்படுத்த வேண்டும்.
தனபால்: ஆதனூர் மழை மாரியம்மன் கோவில் வளாகத்தில் இடிக்கப்பட்ட சமூதாய கூடத்துக்கு பதிலாக புதிய கூடம் அமைக்க வேண்டும்.
தகட்டூர் செல்லமுத்து: மீன் இறைவை பாசன திட்ட மோட்டார்களை இயக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துணைத்தலைவர்: கோடியக்காடு உப்புக்குளம் கான்கிரீட் தடுப்பு தளத்தை சீரமைக்க வேண்டும்.
ஆணையர்: கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் செல்லும் பாதையில் ஏற்படும் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறையினர் அடுத்த கூட்டத்தில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.