வி.சி.க. மாவட்ட செயற்குழு கூட்டம்

வி.சி.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-06 18:30 GMT

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கட்டிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் வருகிற 14-ந் தேதி அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாளாக கொண்டாடி ஜனநாயகம் காப்போம் என்ற வாசகங்களுடன் விடுதலை சிறுத்தைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது. மேலும் 16-ந் தேதி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாபெரும் ரத்ததானம் முகாம் நடத்துவது. வருகிற மே மாதம் 5-ந் தேதி அரியலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கட்சியின் மாநில வணிகர் அணி மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் திரளானவர்கள் கலந்துகொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் வீர.செங்கோலன், மாவட்ட பொருளாளர் கலையரசன், மாவட்ட துணை செயலாளர் மன்னர்மன்னன், சட்டமன்ற தொகுதி செயலாளர் ரத்தினவேல், மாவட்ட செய்தி தொடர்பாளர் வக்கீல் ஸ்டாலின், உதயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்