வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக பொன்.முத்தையா பாண்டியன் தேர்வு
வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக பொன்.முத்தையா பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.
வாசுதேவநல்லூர்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாசுதேவநல்லூர் ஒன்றிய நிர்வாகிகளுக்கான தேர்தல் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, தேர்தல் ஆணையாளராக முன்னாள் அமைச்சர் காந்தி செல்வன் ஆகியோர் தலைமையில் கடையநல்லூரில் நடந்தது. வாசுதேவநல்லூர் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகளுக்கான தேர்தலில் வாசுதேவநல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளரும், வாசுதேவநல்லூர் யூனியன் தலைவருமான பொன்.முத்தையா பாண்டியன் தலைமையிலான அணியினர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக பொன்.முத்தையா பாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, மாவட்ட செயலாளர் செல்லத்துரை மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.