உறையூர் நாச்சியார் கோவிலில் வசந்த உற்சவம் தொடங்கியது

உறையூர் நாச்சியார் கோவிலில் வசந்த உற்சவம் தொடங்கியது

Update: 2023-05-17 18:57 GMT

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை திருநாள் என்ற வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடானார். மாலை 6.45 மணி முதல் இரவு 7 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை தீர்த்த கோஷ்டி நடைபெற்றது. இரவு 7.15 மணி முதல் 8.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 8.45 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைந்தார். வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் வசந்த உற்சவத்தில். 21-ந்தேதி வரை வெளிக்கோடை உற்சவமும், வருகிற 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவமும் நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்