வீரட்டானேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவ விழா
திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவ விழா தொடங்கியது
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள சிவானந்தவல்லி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 10 நாட்கள் வசந்த உற்சதவம் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் கோவிலில் வசந்த உற்சவ விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா அடுத்த மாதம்(மே) 5-ந் தேதி வரை நடக்கிறது.