தர்மபுரி குமாரசாமிப்பேட்டைசிவசுப்பிரமணிய சாமி கோவிலில் வருஷாபிஷேக விழா

Update: 2023-08-28 19:45 GMT

தர்மபுரி

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள ஆனந்த நடராஜர், சென்னகேசவ பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிவசுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்