வடக்குத்தி அம்மன் கோவில் வருசாபிஷேக விழா
செங்கோட்டை வடக்குத்தி அம்மன் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை கோனார் தெருவில் வடக்குத்தி அம்மன் கோவில் 9-ம் ஆண்டு வருசாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி தேவதா அனுக்ஞை, மகாகணபதி பூஜை, பஞ்சகவ்ய பூஜை, புண்ணியாகவாசனம், வேதிகார்ச்சனை, கும்ப பூஜை, நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், துா்க்கா ஹோமம், மூலமந்திர ஹோமம், மகா பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து விமானம் மற்றும் மூலஸ்தானத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை யாதவா் சமுதாய நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனா்.