தோரணமலை முருகன் கோவிலில் வருணகலச பூஜை

தோரணமலை முருகன் கோவிலில் வருணகலச பூஜை நடைபெற்றது.

Update: 2022-06-10 14:23 GMT

பாவூர்சத்திரம்:

தோரணமலை முருகன் கோவிலில் விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், வருண கலச பூஜை நடைபெற்றது. மேலும் மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்