வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

கல்வராயன்மலையில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-02-02 18:45 GMT

கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள மேல்பாச்சேரி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மருத்துவர்கள் ஆர்த்திகா, அருண்பிரதாப், பிரகாஷ், ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை வரவேற்றார். இந்த மருத்துவ முகாமில் மேல்பாச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கெடார், சின்னதிருப்பதி, கொடமாத்தி, தாழ்பாச்சேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர். அவர்களை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் ஜனார்த்தனன், தயாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்