வருமுன் காப்போம் மருத்துவ முகாம் தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

வருமுன் காப்போம் மருத்துவ முகாமை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-17 19:00 GMT

திருப்புவனம்

திருப்புவனம் யூனியனை சேர்ந்த சங்கங்குளம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் டி.புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம் சங்கையா முன்னிலையில் நடைபெற்றது. மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தும், கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தையும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் நோயாளிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கியும் சிறப்புரை ஆற்றினார். முகாமில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஈஸ்வரன், சுப்பையா, பழையனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கோபால், மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேவதாஸ், மடப்புரம் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமில் கர்ப்பிணிகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு தலைமையில் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்