வரண்டியவேல் மைக்கண்நாடார் குடியிருப்பில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு
வரண்டியவேல் மைக்கண்நாடார் குடியிருப்பில் புதிய பயணிகள் நிழற்குடையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
தென்திருப்பேரை:
வரண்டியவேல் மைக்கண்நாடார் குடியிருப்பில் புதிய பயணிகள் நிழற்குடையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
புதிய பயணிகள் நிழற்குடை
ஆழ்வார் திருநகரி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட வரவேண்டியவேல் மைக்கண்நாடார் குடியிருப்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இதன் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இதை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், அமைச்சூர் கபடி கழக வீரர் கந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
புதிய பஞ்சாயத்து அலுவலகத்துக்கு அடிக்கல்
மேலும், உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட குதிரைமொழி ஊராட்சி சோலைகுடியிருப்பில் ரூ.40லட்சம் மதிப்பில் புதிய பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா யூனியன் தலைவர் பாலசிங் தலைமையில், பஞ்சாயத்து தலைவர் சிவசக்தி முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சாமிநாதன், தி.மு.க.மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.