கோவில்பட்டி கோவிலில் வளர்பிறை சிறப்பு பூஜை

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி கோவிலில் வளர்பிறை சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-07-04 16:38 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கணபதி பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சப்த கன்னிகளுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான பொருட்களால் அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




Tags:    

மேலும் செய்திகள்