வராகி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமி வழிபாடு

பள்ளுர் வராகி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமி வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-05-24 17:27 GMT

நெமிலி அடுத்த பள்ளுர் கிராமத்தில் உள்ள வராகி அம்மன் கோவிலில் நேற்று வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தேங்காய் மற்றும் பூசணிக்காயில் நெய்ஊற்றி தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். பஞ்சமி வழிபாட்டில் சென்னை, பெங்களூரு, அரக்கோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்