மணல் கடத்தல் பற்றி புகார்: தூத்துக்குடி அருகே அலுவலகத்திற்குள் புகுந்து விஏஓ வெட்டிக்கொலை
தூத்துக்குடி முறப்பநாடு அருகே அலுவலகத்திற்குள் புகுந்து விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டிக்கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டியுள்ளனர். படுகாயமுற்ற பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வெட்டுப்பட்ட பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல் கடத்தல் பற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மணல் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீதம் உள்ள ஒருவரை போலீசார் தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.