வண்டுறை மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா
வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா நடந்தது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் சிவராத்திரி திருவிழா கடந்த 15-ந் தேதி ெதாடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர், தயிர், இளநீர், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.