ராமேசுவரம்-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில்-ரெயில்வேதுறை மந்திரிக்கு தே.மு.தி.க. கோரிக்கை

ராமேசுவரம்-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில்-ரெயில்வேதுறை மந்திரிக்கு தே.மு.தி.க. கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-09-25 18:45 GMT

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சிங்கை ஜின்னா ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகவும், புண்ணியதலமாகவும் விளங்கும் ராமேசுவரம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே சென்னையிலிருந்து ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து சென்னை இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ரெயில் இயக்கினால் ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பயணம் செய்யும் நேரமும் மிச்சமாகும். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வர்த்தகர்கள் தினமும் ரெயில் மற்றும் பஸ் மூலம் சென்னை சென்று வருகின்றனர். வந்தே பாரத் ரெயில் இயக்கினால் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்லாது வர்த்தகம் செய்பவர்களுக்கும் வசதியாக இருக்கும். அதனால் ராமேசுவரம்-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என ரெயில்வே துறை மந்திரிக்கு மனு அனுப்பி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்